சாதி ஒழிப்பு அல்லது கேலிக்கூத்து!


     சாதி என்பது இப்போதெல்லாம் அரசியல் செய்யத்தான் அதிகமாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்கொடுமை சட்டம் என்ற பி.சி.ஆர். ஆக்ட் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது இப்போது அதிகமாகி உள்ளது. இந்த சட்டம் பெரும்பாலும் ஆதாய நோக்கத்துடனேயே காவல் நிலையங்களில் பதியப்படுகிறது. கிராமப்பகுதிகளில், இந்த பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்களே! அந்த இளைஞர்களின் கல்வி - வேலைவாய்ப்பு - தொழில் போன்ற பல வாழ்வாதாரங்கள் பாதிக்க படுகின்றன. சாதாரண வாய்க்கால்/ வரப்பு சண்டை முதல் பக்கத்து வீட்டுக்காரன் வேலி பிரச்சனைக்கும் கூட இந்த பிசிஆர் சட்டம் தலித் அல்லாதோர் மீது பதியப்படுவது வேதனையான உண்மை. அதற்கு சில காவல் துறையினரும் உடன் போகின்றனர் என்பதும் கூடுதல் அச்சத்தை பொதுமக்கள் மீது ஏற்படுத்துகிறது. மேலும், இந்த பிசிஆர் வழக்கை முதலில் பதிவு செய்து விட்ட பிறகு,  ”கேஸை வாபஸ் வாங்கி விடுகிறேன். எவ்ளோ பணம் தருவீங்க” என்ற ரீதியில் பேரங்களும் பல இடங்களில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. வன்கொடுமை சட்டத்தில் அரசாங்கம் சில திருத்தங்களை கொண்டு வந்தால் தான், கிராம பகுதிகளில் தலித் அல்லாதோர் வாழ முடியுமென்ற சூழல் தற்போது உருவாகி உள்ளது. இப்படி தவறுதலாக, பொய்யான பிசிஆர் வழக்குகளை பதிய வரும் நபர்கள் மீது தக்கவிதத்தில் நடவடிக்கை எடுக்க, சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்

1 மறுமொழிகள்:

Anonymous said...

இதை நாம் சந்திக்க வேண்டும் ஒரு இனத்தின் பாதுகாப்பிற்காக கொடுக்கபட்ட சட்டம் அதையே இந்த குடியான இனத்தின் மீது கொண்டு தாக்கப்டுமாயின் அதை உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

Post a Comment