66ஏ அல்லது வாய்ப்பூட்டு சட்டம்!



இப்போதெல்லாம், இணையத்தில் இயங்கும் பலராலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை இந்த 66ஏ மட்டுமே. சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை எழுத்தின் வாயிலாக தெரிவித்து வரும் அனைவருக்கும் ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த 66ஏ என்ற தகவல் தொழில்நுட்ப சட்டம்.

அப்படி என்னத்தான், இந்த சட்டத்தினால் பாதிப்பு என்பதை ஆராயும்போது பல சம்பங்களையும், அதன் ஆணிவேராக உள்ள அரசியல் சர்வதிகார அடக்குமுறைகளையும் எம்மால் உணர முடிந்தது. ஜாயத்ின் மூலக்கூறுகான பேச்சுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளையே அது பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதும் பல சம்பவங்களின் மூலமாக எம்மால் அறிய முடிகிறது.

சம்பவம் - 1 :

பாடகி சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களில் தமது கருத்தை ட்விட்டரில் பிய, விவாதத்தின் தொடர்ச்சியில் சின்மயி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் ‘தனிப்பட்ட’ வகையில் போக, அவர் புகார் கொடுக்க இருவர் மீது வழக்குப் பாய்ந்ு, கு வை சென்ற.

சம்பவம் - 2 :

சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்க விவகாரத்தில், கோஷ்டிப் பூசலில் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இருவரை இதே 66- ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்து 12 நாட்கள் ஜெயிலில் வைத்து விட்டது.

சம்பவம் - 3 :

மேற்குவங்கத்தில், வலைத்தளம் வழியாக விமர்சனம் செய்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

சம்பவம் - 4 :

‘மும்பையில் கடைகள் மூடப்பட்டது பால் தாக்கரேயின் மீதுள்ள மரியாதை அல்ல; பயம்’ என்று சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொன்ன இரு இளம்பெண்கள் போலீஸால் கைது செய்யப்பட்டார்கள்.

சம்பவம் - 5 :

கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மணி காலை ஐந்து. புதுச்சேரி குறிஞ்சி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவின் அமைதியைச் சீர்குலைத்தவாறு, போலீஸ் ஜீப் ஒன்று சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் வீட்டின் முன் நிற்கிறது. உள்ளே வந்த போலீஸ்காரர்கள் காலிங் பெல்லை அடிக்கிறார்கள். ‘நாங்க போலீஸ்... நீங்க தானே ரவி’ என்று ஒருவர் கேட்க, ‘ஆமாம்’ என்று ரவி சொல்ல ‘எங்க கூட வாங்க உங்களைப் பற்றி புகார் வந்திருக்கு.’ என்றனர். ஜீப்பில் போகும்போது, ‘கம்ப்யூட்டரில் என்ன எழுதினீங்க... கார்த்திக் சிதம்பரம் பற்றி...’ என்று எஸ்.ஐ.கேட்க, அப்போதுதான் ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பற்றி ஒரு கருத்து சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ‘வதேராவை விட கார்த்திக் சிதம்பரத்துக்கு அதிக சொத்துகள் இருக்கு’ என்பதுதான் ரவி போட்ட செய்தி.

‘இதன் காரணமாகத் திட்டமிட்டு என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும்’ என்று முதல் நாள் இரவு கார்த்தி அனுப்பிய ஃபேக்ஸ் புகார் மீதுதான் அத்தனை அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

“என் ட்விட்டரைத் தொடருபவர்கள் மொத்தம் 16 பேர். இவர்கள் என் நண்பர்கள். உறவினர்கள். கருத்துப் பரிமாற்றம் எங்களுக்குள்தான். ஒரு வருடத்துக்கு முன் சிதம்பரத்தைப் பற்றியும் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அதையும் குறிப்பிட்டு, ‘என் குடும்பத்தைத் திட்டமிட்டு களங்கப் படுத்துகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருக்கிறார் கார்த்தி. என்னைப் பிடித்துப் போன போலீஸுக்கு ட்விட்டர் என்றால் என்ன என்று கூடத் தெரியவில்லை. பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு மாலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது. 2008, தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66A ன் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு மூலம் அரசியல் சட்டம் நமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது," என்கிறார் அண்ணா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் ஆர்வலர் ரவி சீனிவாசன்.

சம்பவம் - 6 :

பரமக்குடி படுகொலைகளை கண்டித்ததால், தேசியப்பாதுகாப்பு சட்டதில் கைது செய்யப்பட்டுள்ள மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிராபகரன் மீதும் இந்த 66ஏ சட்டத்தின் வாயிலாக மேலும் ஒரு வழக்கை காவல்துறை பதிவு செய்துள்ளனர். காரணம் என்னவென்று ஆராய்கையில், மறத்தமிழர் சேனை என்ற அமைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் தான் காரணமென காவல்துறை கைகாட்டுகிறது. ஓர் அமைப்பின் செயல்பாடுகளை தெரிவிக்க, கொள்கைகளை பரப்ப இணையதளம் ஆரம்பிப்பது இயல்பான நிகழ்வு என்றபோதிலும் கூட, அதையே காரணம் காட்டி இந்த சட்டத்தினால் ஒடுக்கப்படுவது என்பது கண்டனத்துக்குரியதே.

மேற்சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்துமே ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோல பல சம்பவங்கள் வெளிஉலகிற்கு வராமலே, அரசாங்க அடக்குமுறையால் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். மேலும், இதுவொரு தனிப்பட்ட சம்பவமும் அல்ல; ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வலைதளத்திலும் கருத்துகளை சொன்ன பலரும், இந்த 66 ஏ சட்டப்பிரிவின் ஊடாக வழக்கு - கைது - அபராதம் என்று பலவகையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே, இன்னும் பலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூட தயங்குகின்றனர். இணையத்தில் ஒரு வலைதளமோ அல்லது முகநூலில் ஒரு குழுமமோ வைத்திருந்து, அதில் தங்களது கருத்துகளை பகிர்ந்தாலே 66ஏ சட்டம் பாயுமென்றால், இந்த சட்டம் தூக்கியெறிய வேண்டிய ஒன்றே! அன்று வெள்ளைக்காரன் வாய்ப்பூட்டு சட்டத்தால் தேசிய தலைவர்களின் கருத்துரிமையின் குரல்வளையை நெரித்தது போல, இன்றும் வெள்ளைக்காரனின் ஏவலாளாய் வீற்றிருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் 66ஏ யென்ற சட்டத்தால் ஒட்டுமொத்த குடிமக்களுடைய உரிமைகளின் குரல்வளைகளை நெரிக்கின்றனர் என்பது ஜனநாயகத்தின் அவமான அடையாளமே!



நன்றி - கல்கி, ஆந்தை ரிப்போர்ட்டர், புலவர் தருமி

0 மறுமொழிகள்:

Post a Comment